ரஷ்யா பறக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவுக்குப் புறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளை தெஹ்ரான் தீவிரப்படுத்தி வரும் நிலையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்குப் பயணம் செய்வார் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா தடை
பெப்ரவரி 28 அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஈரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்ட ஈரானிய தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்ததால், வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஈரான், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை முடக்கி உள்ளதால் உலகச் சந்தைக்குச் செல்லும் பெருமளவிலான எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் தடைபட்டுள்ளன.
இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த போதிலும் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தைகள்
அமெரிக்கா-ஈரான் இடையே 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகள் இதுவரை கைகூடாமல் உள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் சமீபத்திய பாகிஸ்தான் பயணம் எந்த ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தவில்லை.

ஈரானின் துறைமுகங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள வரை தனது நாடு பேச்சுவார்த்தை நடத்தாது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களை நேரடியாகச் சந்திக்க ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று டரம்ப் தெரிவித்துள்ளார்.
‘ஈரான் விரும்பும் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம்’’ இனி பேச்சுவார்த்தையை நடத்துவது ஈரானின் கைகளில் இருப்பதாக டிரம்ப் சூசகமாக கூறி உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 4 மணி நேரம் முன்