ஆயுத உற்பத்திகளை அதிகரிக்கும் ரஷ்யா...உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா!
நேட்டோவின் (NATO) 32 உறுப்பு நாடுகளின் மொத்த ஆயுத உற்பத்தியை விட இந்த ஆண்டு (2024) அதிக பீரங்கிகளை ரஷ்யா (Russia) உற்பத்தி செய்யும் என்று அமெரிக்கா (America) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024இல் ரஷ்யா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ராணுவத்திற்காக செலவிட உள்ளது என்று ஸ்டொக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகமும் (International Stockhome peace Club) கூறியுள்ளது.
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இன்று (06) இரண்டு பேருந்துகள் மீது உக்ரேனிய (Ukraine) ஆளில்லா விமானம் நடத்திய தாக்குலில் அறுவர் கொல்லப்பட்டு, 35 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடி...நேட்டோவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டணியால் வலுக்கும் சிக்கல்!
உக்ரைனின் தாக்குதல்
பெரெசோவ்கா (Berezovka) கிராமத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் (Vyacheslav Klatkov) தெரிவித்தார். கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட பேருந்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இரண்டு குழந்தைகள் மிக மோசமாக காயமடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களைக் குறிவைப்பதை மறுக்கும் கியவ், பொதுமக்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்களை "மேற்கத்திய நாடுகள் புறக்கணிப்பதாகக் கூறும் ரஷ்யாவைத் தாக்கும் உரிமை தனக்கு இருப்பதாக" கூறியுள்ளது.
ஆயுதங்களை அதிகரிக்க வேண்டும்
இந்நிலையில், அமெரிக்காவுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் வெளிப்படையான மோதலில் இருப்பதால் மேற்கத்திய நாடுகளின் தாக்குதலைத் தடுக்க ரஷ்யா தனது ஒட்டுமொத்த ஏவுகணை ஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்யத் தூதர் ஒருவரும் இன்று கூறியுள்ளார்.
1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான முறிவை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய, அமெரிக்கத் தூதர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |