பதிலடி உறுதி : உக்ரைனுக்கு ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ரஷ்ய (Russia) மின் நிலையங்கள் மீதான உக்ரைன் (Ukraine) தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி அளிக்கும் உரிமையை ரஷ்யா கொண்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் துருப்புக்கள் பின்வாங்கி வரும் எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்ய எரிவாயு பம்பிங் நிலையத்தை வெடிக்கச் செய்ததாக ரஷ்யாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூன்று வருடமாக நீளும் போரில் உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பை ரஷ்யா மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளது.
எரிசக்தி வசதி
பதிலுக்கு ரஷ்யாவின் எரிசக்தி வசதிகளை உக்ரைனும் தாக்கியுள்ளது.
தற்போது அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தலைமையிலான நிர்வாகம் உக்ரைன் போர் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க கடுமையாக போராடி வருகின்றது.
இதில் உக்ரைன் தரப்பு ஒப்புதல் அளித்துள்ள போதும் இதுவரை ரஷ்யா பதில் கூறாமல் ட்ரம்புக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
ரஷ்யா உடன் நெருக்கமான உறவை உருவாக்க முயன்று வரும் ட்ரம்ப் நிர்வாகம், ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) மெத்தனத்தை கேள்வி கேட்க முடியாமல் திணறி வருகின்றது.
வெள்ளை மாளிகை
இருப்பினும், வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கேள்விகளால் துளைத்து அவமானப்படுத்தும் அச்சுறுத்தும் செயலை ட்ரம்பும் அவரது முதன்மையான அமைச்சர்களும் நடத்தினர்.
அத்தோடு, உக்ரைனுக்கு நெருக்கடி அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
அதே நடவடிக்கைகளை ரஷ்யா மீது ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுக்க தயங்கி வருகின்றது.
தற்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்து வருவதுடன் உக்ரைன் மீது அப்பட்டமாக புகார் கூறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்