உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா - ஒரே இரவில் தாக்கிய 540 ஆளில்லா விமானங்கள்
உக்ரைனின் 14 பிராந்தியங்கள் மீது ரஷ்யா (Russia) ஒரே இரவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தலைநகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளடங்குகின்றன.
இந்த தாக்குதல்களின் போது ரஷ்யா கிட்டத்தட்ட 540 ஆளில்லா விமானங்களையும் 45 ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தீவிர தாக்குதல்
போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைன் (Ukrainian) மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதலின் அனைத்து இலக்குகளும் அடையப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
எனினும் தாக்குதல்களின் விளைவு குறித்து உக்ரைனின் உத்தியோகபூர்வ கருத்து இன்னும் வெளியாகவில்லை.
தீ விபத்துகள்
இந்த தாக்குதல்களின் போது தெற்கு சபோரிஜியா பகுதியில் ஒரு பெண் கொல்லப்பட்டார். சிறுவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் இந்த தாக்குதலில் Zaporizhzhia நகரில் 14 மாடி கட்டிடங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட தனியார் வீடுகள் சேதமடைந்தன.
மேலும் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
