ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு! உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை புளோரிடாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள பின்னணியில் குறித்த தாக்குதல் எதிர்வாதங்களை தூண்டியுள்ளது.
பேர் நிறுத்தத்தை அடிப்படையாக கொண்ட 20 அம்ச திட்டத்தை ட்ரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
நாளை பேச்சுவார்த்தை
இது தொடர்பாக அமெரிக்கா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேசப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |