உக்ரைன் போரில் மற்றுமொரு மிக முக்கிய தளபதியை இழந்தது ரஷ்யா
russia
killed
ukraine
war
commander
By Sumithiran
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மற்றுமொரு மிக முக்கிய தளபதியை இழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி லெப்டினன்ட் கேணல் டெனிஸ் மெசுவேவ் என்ற தளபதியே போரில் இழந்துள்ளதாக ரஷ்ய படை தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த தளபதி கொல்லப்பட்டதை உக்ரைன் வெளியிட்ட பின்னர் ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. ஆனால், மேலதிக தகவல் ஏதும் லெப்டினன்ட் கேணல் டெனிஸ் மெசுவேவ் கொல்லப்பட்டது தொடர்பில் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ரஷ்யாவின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான Andrey Kovalev, சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், ரஷ்யாவின் முக உயரிய விருதளித்து டெனிஸ் மெசுவேவை கெளரவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ரஷ்யா இதுவரை 7 தளபதிகளையும் 33 மிக உயரிய பதவியில் இருக்கும் இராணுவ தலைவர்களையும் இழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி