உக்ரைனின் மின்கட்டமைப்பு மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல்: இருளில் மூழ்கிய நகரங்கள்
உக்ரைனின்(Ukraine)கார்கிவ் நகரிலுள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா (Russia) பாரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலானது இன்று (22) மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர்
உக்ரைன் மீது கடந்த 2022 ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது.
இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் நீடித்து வருகின்றது.
மேலும், மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளால் ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சி இன்னும் பலனளிக்கவில்லை.
ஏவுகணை தாக்குதல்
இந்தநிலையில் உக்ரைன் நாட்டின் 2ஆவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளதோடு19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் ,16 ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்கள் மூலம் எரிசக்தி மீது ரஷ்யா 8 முறை தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |

