நேரடி யுத்தத்துக்குத் தயாராகி வரும் ரஷ்யா- நேட்டோ படைகள்!
ரஷ்யாவுக்கும்(Russia) உக்ரேனுக்கும்(Ukraine) இடையே கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்றுவருகின்ற யுத்தம் மிக மோசமான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் தற்பொழுது நடைபெற்றுவருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான யுத்தமாகவும், சாதாரண போரயுதங்கள் கொண்டு நடைபெற்றுவருகின்ற சண்டைகள், அணுவாயுதங்கள் கொண்டு நடைபெறக்கூடிய சண்டைகளாகவும் விரைவில் மாற்றம்பெற்றுவிடும் அபாயத்தை எதிர்வுகூறுகின்றார்கள் போரியல் ஆய்வாளர்கள்.
ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிவதற்காகவென்று உக்ரைனுக்கு அமெரிக்கா(America) வழங்கி வந்த சில ஆயுதங்களுக்கு இதுவரை அமெரிக்கா விதித்திருந்த கட்டுப்பாடுகளை நேற்றையதினம் அமெரிக்க தளர்த்தியுள்ளதானது யுத்தம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது.
விரைவில் ஆரம்பமாகலாம் என்று அச்சப்படுகின்ற 'ரஷ்ய நேட்டோ யுத்தம்' பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |