உக்ரைனின் பதிலடியை முறியடித்த ரஷ்யா: முன்னேற்றங்களை மறுத்த புடின்
ரஷ்ய படைகளுக்கு எதிரான உக்ரைனின் எதிர்த் தாக்குதல் தோல்வி அடைந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முட் நகரைச் சுற்றியுள்ள முன்னரங்கப் பகுதிகளில் தாம் முன்னேற்றம் கண்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், புடினின் இந்த கருத்து வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருங்கடல் பகுதியான சோச்சியில் வைத்து துருக்கியின் அதிபர் தையீர் ஏர்துவானை, விளாடிமீர் புடின் சந்தித்து கலந்துரையாடிதாக கூறப்பட்டுள்ளது.
அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்து
தானிய ஏற்றுமதி தடை
குறித்த சந்திப்பில் கருங்கடல் துறைமுகங்கள் ஊடாக உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்த்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது விவசாய மற்றும் பசளை ஏற்றுமதிகளை அனுமதிக்கும் கோரிக்கைகள் மேற்குலக நாடுகளால் நிறைவேற்றப்படும் வரை தானிய உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவது சாத்தியமற்றது என புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் தானிய ஏற்றுமதி தடை காரணமாக உலகளாவிய ரீதியில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தானிய உடன்படிக்கை
இந்நிலையில் மேற்குலக நாடுகள் தமது தரப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்சத்தில் குறித்த தானிய உடன்படிக்கை மீள நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என புடின் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னரங்கப் பகுதிகளில் அண்மைய நாட்களில் முன்னேற்றங்களை கண்டுள்ளதாக உக்ரைன் உரிமை கோரியுள்ள நிலையில், அதனை அவர் நிராகரித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனின் எதிர்த் தாக்குதல்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் இதே நிலைமையே தொடரும் என நம்புவதாகவும் புடின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.