அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்திற்கு அப்பட்டமான சவால்: ரஷ்யா கடும் எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை, அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்திற்கு (NPT) எதிரான ஒரு பகிரங்கமான செயல் என்று ரஷ்யாவின் சிறப்புத் தூதர் ஆண்ட்ரே பெலோசோவ் கடுமையாகச் சாடியுள்ளார்.
ரஷ்யச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு விதிகளில் இந்தத் தாக்குதல் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு சபை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதியின்றி சர்வதேச அங்கீகாரத்தைப் புறந்தள்ளி இந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) அதிகாரத்தையும் அதன் பாதுகாப்பு விதிமுறைகளையும் பலவீனப்படுத்தியுள்ளதாக பெலோசோவ் வலியுறுத்தியுள்ளார்.

அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்த ஈரானுக்கு இருக்கும் பறிக்க முடியாத உரிமையை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது சர்வதேச சட்டதிட்டங்களுக்கு விடப்பட்ட சவால் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலானது அணுசக்தி ஒத்துழைப்பு கட்டமைப்பில் ஈடுசெய்ய முடியாத விரிசலை ஏற்படுத்தும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்