உக்ரைனின் எரிபொருள் நிலையங்களை இலக்குவைத்த ரஷ்யா!
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Dharu
தெற்கு உக்ரைனில் ஓடேசா பகுதியில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் துறைமுகங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் 90,000 பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாக உக்ரைன் தரப்புகள் கூறியுள்ளன.
அமெரிக்கா முயற்சி
இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இதற்காக ரஷ்யா, உக்ரைன் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்