வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்..! முதன்முறையாக மனம் திறந்த புடின்
விளாடிமிர் புடின்
உக்ரைன் போரில் சண்டையிடும் ரஷ்ய வீரர்களின் தாய்மார்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதன்முறையாக சந்தித்துள்ளார்.
ஒட்டுமொத்த ரஷ்ய தலைமையும் தாமும் அந்த தாய்மார்களின் வலியில் பங்குகொள்வதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் மாஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய மோதலை ரஷ்ய படையெடுப்பு தூண்டியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இலட்சக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் போரிட அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், செப்டம்பரில் புடின் அறிவித்த அணிதிரட்டலின் ஒரு பகுதியாக 300,000 இற்குக்கும் அதிகமான வீரர்கள் அழைக்கப்பட்டனர்.
உங்கள் வலி எனக்கு புரியும்

இந்த நிலையில், உக்ரைனில் சண்டையிடும் வீரர்களின் தாய்மார்களை நேரில் சந்தித்த விளாடிமிர் புடின், அவர்களுக்காக சிற்றுண்டி விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் பேசிய அவர், மொத்த நாடும் உங்கள் வலிகளில் பங்கு பெறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் இழப்பை எதனாலும் ஈடு செய்ய முடியாது என்பதை அறிவேன் என குறிப்பிட்டுள்ள புடின், உங்கள் வலி எனக்கு புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த தாய்மார்கள் என்ன பதிலளித்தார்கள் என்பது உடனடியாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தங்களது பிராந்தியத்தில் இருந்து கடைசி ரஷ்ய வீரரை வெளியேற்றும் வரை போராடுவோம் என்று உக்ரைன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this