உக்ரைனின் முக்கிய நகரத்தை நெருங்கும் ரஷ்ய துருப்பு - தடுக்க உக்ரைன் படைகள் தீவிர முயற்சி!
உக்ரைனின் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஒரு வருடங்கள் கடந்தும் நீடித்து வருவதுடன், உக்ரைனின் பல முக்கிய இடங்களை ரஷ்ய படைகள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தநிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் கடந்த சில காலங்களாக தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வந்தன.
தற்போது ரஷ்ய துருப்புக்கள் நாலாபுறமும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி பாக்முத் நகருக்குள் நுழைந்து விட்டது.
பாக்முத் நகரை கைப்பற்ற முயற்சி
இருப்பினும் ரஷ்ய படைகளை குறித்த நகருக்குள் முற்றாக நெருங்க விடாது உக்ரைன் இராணுவமும் கடுமையான பதில் தாக்குதல்களை தொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
இரு தரப்பினதும் கடுமையான தாக்குதல்களின் விளைவாக பாக்முத் நகரம் முற்றாக சிதைந்துள்ளது, அங்கு வசிக்கும் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ரஷ்ய படைகள் முற்றாக பாக்முத் நகரை கைப்பற்றவில்லை என அந்த நகர மேயர் அலெக்சாண்டர் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.
