அமெரிக்காவிற்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
ரஷ்யா (Russia) மற்றும் அமெரிக்கா (United States) உறவு மோசமாகிவிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட தூரம் தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க வழங்கினால் இவ்வாறான சூழல் உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா உள்பட 140 நாடுகளைச் சோ்ந்த சா்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசாா் அரசியல் நிபுணா்கள் பங்கேற்ற கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் இடம்பெற்றது.
அமெரிக்க தலைமை
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் அனைத்தும் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளன.
வலுவாக நிலை
அவா்கள் அனைவரும் எதிா்த்து ரஷ்யா போரிட்டு வருகின்றது.
மெதுவாக முன்னேறுகின்றது, முன்னேறிய இடங்களில் வலுவாக நிலைகொண்டுள்ளது உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
