வெனிசுலா கடற்கரையில் பறந்த அமெரிக்க போர் விமானங்களால் பதற்றம்
அமெரிக்காவின் (United States) நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக வெனிசுலாவின் (Venezuela) பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவின் வடக்கு பகுதி கரீபியன் கடற்கரை பகுதியில் அமெரிக்காவின் எப்-35 ரக போர் விமானங்கள் பறந்துள்ளது.
இந்த விடயத்தை வெனிசுலா வான் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு
இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க போர் விமானங்கள் எங்கள் கடற்கரையில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்தில் (46.6 மைல்) கண்டறியப்பட்டு உள்ளது.
இது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்கள்
தங்கள் நாட்டு கடற்கரை பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததற்கு வெனிசுலா நாட்டின் பாதுகாப்பு மந்திரி விளாடிமிர் பட்ரினோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்கா வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.
இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது, அமெரிக்காவின் நடவடிக்கையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
