அலக்ஸி நவல்னியின் மர்ம மரணம்! விசாரணையை வலியுறுத்தும் பிரித்தானியா
ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிகாரிகளே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய தூதகரகத்திடம் பிரித்தானியா தமது வலியுறுத்தலை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி ரஷ்ய அதிபர் புடினையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தமையால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது.
3 ஆண்டு சிறைத்தண்டனை
அதனை தொடர்ந்து, கடந்த 2013இல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆகையால் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், அவர் திடீர் என நேற்று சிறையில் உயிரிழந்தார்.
பிரித்தானியா
உக்ரைனுடனான போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புடினுக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் அவரது மரணம் தொடர்பில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |