இலங்கையில் ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர்
Bandaranaike International Airport
Sri Lanka
Russia
By Sumithiran
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரும் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர்.
இந்திய தலைநகரிலிருந்து வந்த பிரதி அமைச்சர்
இவர்கள் இன்று மாலை 04.20 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து ஏ.ஐ.-281 எனும் ஏர் இந்தியா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் (Levan Dzhagaryan) உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்