ஐ.தே.க விற்கு அடிக்கும் மற்றுமொரு அதிஷ்டம்- கிடைக்கவுள்ள பலமான அமைச்சுப் பதவி
Parliament of Sri Lanka
Ruwan Wijewardene
UNP
By Sumithiran
ருவான் விஜேவர்தன நாடாளுமன்றத்திற்கு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்க கட்சி தயாராகி வருகிறது.
எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அதிபராக பதவியேற்றால், நாடாளுமன்றத்தில் காலியாகவுள்ள ஆசனத்துக்காகவே ருவான் விஜேவர்தன நியமிக்கப்படவுள்ளார் .
பலமான அமைச்சுப் பதவி
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து ருவான் விஜேவர்தனவை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்ததன் பின்னர், அவருக்கு சட்டம் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
5ம் ஆண்டு நினைவஞ்சலி