ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட்டவர்கள்...!சிறுமிகளை வேட்டையாடும் ஓநாய்கள் மீது கைவைப்பார்களா

Sri Lanka Sonnalum Kuttram
By Raghav Jan 26, 2025 09:02 AM GMT
Report

ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் நேற்றைய தினம் (25.01.2025) ஒரு விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக காவல்துறையில் முறையிட்டுள்ளார், இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,

இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்களான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் (ஓய்வு) சின்னத்தம்பி பாடசாலை அதிபர் நித்தியகலா (ஓய்வு) தபால் உத்தியோகஸ்த்தர் மனைவி, கிராம அலுவலரின் தாயான மேகலா ஆகிய மூவரும் வழங்கிய தீர்ப்பு கொடூரத்தின் உச்சம் எனலாம்.

குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது, சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக காவல்துறையில் முறையிட்டதையடுத்து, இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இணக்கசபையில் இருந்த நீதவான்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்து, குறித்த நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.

ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட்டவர்கள்...!சிறுமிகளை வேட்டையாடும் ஓநாய்கள் மீது கைவைப்பார்களா | The Arbitration Board That Slapped The Dog

அதன் பிறகு நீதவான்கள் குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைபடத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன கொடுமையான தண்டனை, ஐந்தறிவு உயிரை எப்படி கொடூரமாக கொலை செய்துள்ளார்கள்.

கண் சத்திரசிகிச்சைக்கு கடப்பாறையா தீர்வு....? 

இந்த அடி முட்டாள்களை இணக்க சபைக்கு நியமித்தது யார்? 

3 வருடத்தில் 11 ஆட்டை கடித்த நாயை ஆட்டின் உரிமையாளர் கேட்கிறார் என்றால் நல்ல நோக்கமா அல்லது கெட்ட நோக்கமா என்று தெரியாதவர்களா இணக்க சபையில் உள்ளனர்?

இந்த கொடூரத்தை செய்தவன் நிச்சயமாக ஆறறிவு கொண்ட மனிதனாக இருக்க வாய்ப்பில்லை..... முட்டாள்கள் கூட சில நேரங்களில் சரியாக செயற்படுவார்கள்.

படித்த பட்டதாரிகள் மற்றும் அறிவாளிகள் பல உள்ள வடக்கு கிழக்கில் இது போன்ற கொடூர அடி முட்டாள்களும் உள்ளார்கள் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

நாய்கள் பொதுவாகவே நன்றி குணம் மிக்கது. பண்டைய காலகட்டத்தில் அதன் சான்றாக சில கோயில்களின் முகப்பில் குதிரை,யானை, அத்துடன் நாயும் காவல்தெய்வமாகவும் குறிப்பிடப்படுகிறது.

இறுதியாக மனிதர்களின் சுயநலத்தாலும், அதீத முன்னேற்றத்தாலும் நாய்கள் மட்டுமல்ல அனைத்து வகையான விலங்குகளுமே பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று நாய்க்கு நேர்ந்த இந்த கொடூரம் நாளை சக மனிதனுக்கு நடக்காது என்பதில் என்ன நிச்சயம்... 

இன்று நாயை தூக்கிலிடும் அளவிற்கு சட்டம் உள்ளது என்றால் நாம் வாழும் சமூகத்தில் பச்சிலம் சிறுமிகளையும், பெண்களையும் வேட்டையாடி பூசிக்கும் பிணம் திண்ணி கழுகுகளுக்கு எதிராக ஏன் இந்த சட்டங்களை பயன்படுத்த முடியாது....

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பல சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிமுறைகள் காணப்படுகின்றன. 

1939 ஆம் ஆண்டின் சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டம் ,மற்றும் 1950 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும், பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்தல் சட்டம் 

மேற்குறிப்பிடப்பட்ட சட்டங்களின்படி 14 வயத்திற்குட்பட்ட நபர்கள் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளார்கள்.

ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட்டவர்கள்...!சிறுமிகளை வேட்டையாடும் ஓநாய்கள் மீது கைவைப்பார்களா | The Arbitration Board That Slapped The Dog

சிறுவர்களை தவறானமுறைக்குட்படுத்திய குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய ஆதரமாக தண்டனைச் சட்டக்கோவை காணப்படுகின்றது.

இத்தனை சட்டங்கள் காணப்பட்டாளும் சிறுவர்களுக்கும் பெண்களுக்குமான வன்முறைனகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இலங்கையின் எதிர்­கால சந்ததியினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொறுப்பான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் பொறுப்புக்கூறலுடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது என்பதனை இங்கு நாம் பதிவிடுகிறோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Raghav அவரால் எழுதப்பட்டு, 26 January, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, London, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Idar-Oberstein, Germany

21 Apr, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மொரட்டுவா

23 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Thusis, Switzerland

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, ஆவரங்கால்

27 Apr, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், ஆனைக்கோட்டை

27 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி, Aurora, Canada

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, மன்னார், Toronto, Canada

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023