ரணிலை நேருக்கு நேர் சந்திக்க போவதில்லை! விக்னேஸ்வரன் கூறும் காரணம்
நாளைய தினம் யாழ்ப்பாணம் வரவுள்ள ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை(04) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வேட்பாளர்
மேலும், அரசியல் தீர்வு, நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் அர்த்தப்புஷ்டியான நகர்வுகளை முன்னெடுத்து இலங்கை வாழ் தமிழர்களின் நம்பிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்க வென்றெடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அதிபர் தேர்தல் தொடர்பில் தமிழ் தலைவர்கள் இணைந்து கூறினால் வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணி்லின் விஜயம்
இந்நிலையில், அதிபர் ரணில், நாளை (04) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, அங்கு தமிழ் அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, வழமையாக அதிபர் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது அவரை சந்தித்து தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதாகவும் ஆனால் இம்முறை சுகயீனம் காரணமாக அதிபரை சந்திப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |