சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் நான்கு மாணர்வகள் அதிரடி கைது!

Sri Lanka Police Sabaragamuwa University Sri Lanka Sri Lanka Police Investigation Sabaragamuwa Province
By Raghav May 05, 2025 03:14 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மீது சித்திரவதைகளை மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் நேற்று (04) கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து இன்று (05) அதே குற்றாச்சாட்டில் மேலும் நான்கு மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட மாணவர்கள் நாளை (06) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

முதலாம் இணைப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நான்கு மாணவர்களும் நேற்று (04.05.2025) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு இன்று (05.05.2025) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படடடுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மஹரகம, எம்பிலிப்பிட்டிய, வாரியபொல மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

மாடியிலிருந்து குதித்து உயிர் மாய்த்த மாணவி..! மறைக்கப்படும் பக்கங்கள் - நீதி வழங்குமா அநுர அரசு

மாடியிலிருந்து குதித்து உயிர் மாய்த்த மாணவி..! மறைக்கப்படும் பக்கங்கள் - நீதி வழங்குமா அநுர அரசு

பல்கலை பகிடிவதை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான சரித் தில்ஷான் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். 

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் நான்கு மாணர்வகள் அதிரடி கைது! | Sabaragamuwa University Students Remanded

மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம்சாட்டினர்.

இத்தகைய சூழலில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்கல்வி அமைச்சு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. 

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்தவால் மூன்று பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது. 

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் நான்கு மாணர்வகள் அதிரடி கைது! | Sabaragamuwa University Students Remanded

இந்தப் பின்னணியில், சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும் 20 மாணவர்களிடமிருந்து சமனலவெவ காவல்துறையினர் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

பின்னர், பகிடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை, பதில் காவல்துறைமா அதிபரின் உத்தரவின்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

வடக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வடக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட தங்கம்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

அந்த விசாரணைக்கமைய சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று இரவு கைது செய்தது.

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் நான்கு மாணர்வகள் அதிரடி கைது! | Sabaragamuwa University Students Remanded

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பலாங்கொடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான சரித் தில்ஷான் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை விவகாரம்: துணைவேந்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை விவகாரம்: துணைவேந்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

யாழ். பருத்தித்துறை கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய இளம் பெண்

யாழ். பருத்தித்துறை கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய இளம் பெண்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025