குருந்தூர்மலையில் ஆதி ஐயனார் சூலம் அமைந்துள்ளதா? சச்சிதானந்தம் சர்ச்சை பேச்சு- முற்றுப்புள்ளி வைக்கும் குரல்பதிவு!

Army Mullaitivu Northern Province
By Vasanth Jan 19, 2021 05:41 PM GMT
Report

குருந்தூர்மலை ஆதி ஐயனார் சூலத்தை எவரும் அகற்றவில்லை என மறவன்புலவு சிவசேனை அமைப்பின் க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அண்மித்த குருந்தூர்மலை ஆதி ஐயனார் திருக்கோயில் மூலவரின் சூலம் நீக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறானவை எனவும் குன்றின் உச்சியில் உள்ள சைவ வழிபாட்டு இடம் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது எனவும் குருந்தக் குன்று திருக்கோயில் அறங்காவலர் என்னிடம் தெரிவித்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரம் பெற விரும்புவோர் திருக்கோயில் அறங்காவலர் திரு சசிகுமாருடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தன்குளம் அணைக்கட்டுக்கு அருகே மலையடிவாரத்தில் உடைந்த கட்டிடம் இருந்தது. நான் நேரில் பார்த்திருக்கிறேன். அங்கு புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட முயன்றதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடைந்த அந்தக் கட்டடத்தின் அருகே தொல்லியல் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தனர். மேசைமீது புத்தர் சிலை ஒன்றை வைத்தனர் வணங்கினர்.

அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டவில்லை, மேலோட்டமாக கிளறிப்பாத்தார்கள். அமைச்சர் வந்திருந்தார், படைப் பிரிவினரும் வந்திருந்தார்கள், புத்தபிக்குகள் எவரும் அங்கு வரவில்லை. படைப்பிரிவின் காப்பரண் நெடுங்காலமாகவே அங்கு உண்டு. படைவீரர் ஒருவரோ இருவரோ இருப்பார்கள். கடமைக்கு வராத நாள்களே கூடுதலானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சைவக் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை ஏதுமில்லை, பொங்கலுக்குத் தடையில்லை, வழிபாட்டுக்கு தடையில்லை என அமைச்சர் அறங்காவலரிடம் கூறியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

முழுமையான தகவல் அறியாமலே முச்சூலம் அகற்றியதாகத் தவறான செய்திகள் வெளியாகி சைவ உணர்வாளர்களின் மனம் புண்ணாகியது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குமிழமுனை வழியாகச் சைவ உணர்வாளர்கள் வழிபடு பயணமாக குருந்தக் குன்று சென்று குருந்த மரநிழலில் அமர்ந்து இருக்கும் சிவபெருமானை வழிபட்டு அருள் ஆசி பெற்று வருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் அவ்வாலயத்தின் அறங்காவலருடன் எமது ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் செய்தியாளர் ச.தவசீலன் தொடர்பு கொண்டு வினவிய போது, முன்னர் பிடுங்கப்பட்டிருந்தது. எனினும் மீண்டும் அந்த இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் பிடுங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் இன்று காலை 10 மணியளவில் இரகசியமாக சென்று பார்த்த போது அவ்விடத்தில் சூலம் இல்லை எனவும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026