ரணிலுக்கு வாக்குறுதியளித்த சஜித்
Ranil Wickremesinghe
Meetings
Sajith Premadasa
By Vasanth
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே அண்மையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இரு தலைவர்களும் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் இல்லத்தில் சந்தித்ததாகவும், அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து மட்டுமே இருவரும் விவாதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பழிவாங்கல் ஆணைக்குழு அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு அழுத்தம் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதால், தனது பொறுப்புகளை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்துள்ளார்.