உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு சர்ச்சை :அநுரவிற்கு சஜித் கடும் கண்டனம்
உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பு சபைகளின் நிதியை நிறுத்தி வைப்பது குறித்து சூசகமாக கூறுவது நெறிமுறைக்கு விரோதமானது மட்டுமல்ல, அது பதவி துஷ்பிரயோகமும் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(anura kumara dissanayake) சமீபத்திய பேச்சுக்கு எதிராக அவர் கண்டனம் தெரிவித்தார்.
இன்றையதினம்(21) தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவொன்றை இட்ட சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைப்பு மாற்றம்
அமைப்பு மாற்றம் என்பது மற்றவர்களுக்குப் போதிக்கும் ஒரு முழக்கம் மட்டுமல்ல, அவர்கள் பல தசாப்தங்களாக வளர்த்து வரும் எதிர்மறை முறையும் இதில் அடங்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
The President hinting at withholding funds before an election isn’t just unethical it’s an abuse of office. System change isn’t just a slogan to preach to others; it also includes the system of negativity they have been breeding for decades. Not one corruption case was filed by… https://t.co/TdrZld59Hb
— Sajith Premadasa (@sajithpremadasa) April 21, 2025
ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
"எதிர்க்கட்சியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தியால் ஒரு ஊழல் வழக்கு கூட தாக்கல் செய்யப்படவில்லை, மேலும் அதிகாரத்தில் தற்போது இருக்கும்போது ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேச்சு உண்மையில் மலினமானது, ”என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தியால் நிர்வகிக்கப்படும் சபைகளுக்கு எளிதாக நிதி ஒதுக்குவேன், மற்றவைகளுக்கு அல்ல என்று கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
