புதியதொரு நாட்டை உருவாக்கவுள்ளதாக சஜித் பகிரங்கம்
மக்களுக்கு தேவையான, அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியாது தற்போதைய அரசாங்கம் திண்டாடுகிறது என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa ).
யாழ்ப்பாணம் - நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் கூறிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இனவாதம், மதவாதம் மற்றும் ஒரு துண்டு நிலம் கூட வேறு நாட்டுக்கு கொடுக்காத சிறந்த ஒரு நாட்டை உருவாக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போதைய அரசு ஒரு தோற்றுப்போன அரசு எனவும் அரச தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்று விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் அரசானது மக்களில் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக செயற்பட வேண்டும். ஆனால், இவர்களால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளையே வழங்க முடியாதுள்ளது.
தேர்தல் காலத்தில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால், மக்கள் வாழமுடியாத நிலையில் உள்ளதாக சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.