“எம்மையும் கைது செய்யுங்கள், சிறைக்குச் செல்ல நாம் தயார்” சஜித் சவால்
நாடாளுமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மோதலின் பின்னர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்னாண்டோவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பார்வையிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்னாண்டோவை சஜித் பிரேமதாச இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை, 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஹரின் பெர்ணான்டோவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட சஜித்,
ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்.
சிறைக்குச் செல்ல நாம் தயார் என்றார்.