சிறுமிகளை ஏமாற்றிய சஜித்!! (Photos)
வவுனியாவில் சஜித் பிரேமதாசவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நடனமாடச் சென்ற இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிற்கு இன்று விஜயம்செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.
அத்துடன் பொதுமக்களுடனான அரசியல் நிகழ்வொன்றும் மாலை 3:30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றி முடிந்ததும் கூட்டம் நிறைவடைந்திருந்தது. இதனையடுத்து வெலிஓயா பகுதியில் இடம்பெறும் மற்றொரு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் சென்றிருந்தார். பின் பொதுமக்களும் கலைந்துசென்றுவிட்டனர். குறித்த நிகழ்வில் வரவேற்பு நடனமாடுவதற்காக இரு சிறுமிகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தனர். எனினும் கூட்டம் முடிவடைந்து அனைவரும் சென்ற
மையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் அவர்களது மனம் புண்படாத வண்ணம், அவர்களது நடனநிகழ்வு ஒருசிலருடன் காட்சிப்படுத்தப்பட்டது.
