சிறுவர்களிடம் அதிகரிக்கும் மந்த போசன நிலமை: சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Parliament Sajith Premadasa President of Sri lanka
By Raghav Sep 04, 2024 10:28 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) சிறுவர்களுக்கான மந்த போசன நிலமை அதிகரித்துக் காணப்படும் நிலையிலும், அரசாங்கத்திடம் போசனைக் கொள்கை திட்டம் ஒன்று இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (04) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிறை குறைவான மற்றும் வளர்ச்சி குறைவான (கட்டையான) குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

வளர்ச்சி குறைபாடு

இந்த சிக்கலுக்கு பின்னரான ஆய்வுகளின் படி வீடுகளில் நான்கில் ஒரு பங்கு நடுத்தரமான அளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருகின்றனர் ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு (உயரம் குறைவு) 19.3 ஆக உயர்வடைந்துள்ளது.

சிறுவர்களிடம் அதிகரிக்கும் மந்த போசன நிலமை: சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Sajith Premadasa Parliament Speech

இது கடந்த ஆண்டை விட 9.2% ஆல் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பின் பிரகாரம் 5- 18 வயதுக்குட்பட்டவர்களில் 37.4% ஆகவும் அல்லது 10-17 வயதுக்குட்பட்டவர்களில்1/3 பங்கினர் வளர்ச்சி குன்றியவர்களாக (கட்டையான) அல்லது அதிக எடை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

தேசிய போசணைக் கொள்கை திட்டம் ஒன்றும் இல்லை. எனவே பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவையும் வழங்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டின் பின்னணி என்ன..!

தமிழரசுக் கட்சியின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டின் பின்னணி என்ன..!

குழந்தை தலைமுறை

ஜனாதிபதியின் நிதியத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு முன்பாக இவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

சிறுவர்களிடம் அதிகரிக்கும் மந்த போசன நிலமை: சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Sajith Premadasa Parliament Speech

இவை எதுவும் இல்லாமல் ஜனாதிபதியின் நிதியத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு அனுமதிக்க முடியாது.

இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தை தலைமுறையே சீரழிந்து செல்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகது.

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டுக்கட்சி எம்.பி : வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டுக்கட்சி எம்.பி : வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்