ஆட்சியில் கொடூரமான அரசாங்கம் - சஜித் கடும் தாக்கு
தற்போது நம் நாட்டில் ஊழலும் திருட்டும் தலைதூக்கியுள்ள கொடூரமான அரசாங்கமே ஆட்சியில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர், நாட்டின் அரச சொத்துக்களை, அரச வளங்களை கொள்ளையடிக்கும் பலிகாடாவாக ஆளும் குடும்பம் மாறியுள்ளது. அத்தகைய நாடு ஒரு அங்குலம் கூட முன்னேறாது எனக் கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு இந்தக் குடும்ப அரசாங்கமே முழுப் பொறுப்பு. இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட பணம் அனைத்தும் மீட்கப்படுவது கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். அத்தகைய திருடர்களுக்கு தண்டனை வழங்குவது துல்லியமாக நிறைவேற்றப்படும்.
போராடும் அனைத்து மக்களினதும் கோரிக்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுடன் முழு உடன்பாடு கொண்டவை. அவர்களின் குரலாக ஐக்கிய மக்கள் சக்தி நடைமுறை ரீதியாக நிலை கொள்ளும்.
அதேபோல் கட்சி சார்பற்ற போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் இருக்கும். அரச தலைவர் தலைமையிலான கேவலமான ஆட்சியை இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான ஜனநாயகப் போராட்டம் இடைவிடாது தொடரும்.
நாட்டிற்கு ஜனநாயக ரீதியான வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதில் நான் உறுதியாக அர்ப்பணிப்புச் செய்கிறேன்.
நாடு முழுவதும் வரிசைகளுக்கு மேல் வரிசைகள் இருந்தாலும், விமானங்களை கொள்வனவு செய்ய, இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதிவேக வீதிகளை அமைப்பதன் மூலம் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது” என்றார்.
