விவசாய நிலங்களைப் பார்வையிட்ட சஜித் பிரேமதாச!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) எண்ணக்கருவில் விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் " கொவிஹதகெஸ்ம" திட்டத்தின் இரண்டாவது கட்டமாக திஸ்ஸமஹாராம வெரலிஹலெ இடம்பெற்றுள்ளது.
பாசிப்பயறு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து அப்பகுதி விவசாயிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இது மட்டுமன்றி மேலதிக பயிர்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான சந்தை இல்லாமை, உரம் மற்றும் விதைகளின் பற்றாக்குறை, அறுவடை முறைகளை உள்ள சிக்கல்கள், பாசிப்பயறுச் செய்கைக்கு சமனான சேனைப் பூச்சிகளைப் போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இதன் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.





