கோட்டாபய அழைத்த போது யால காட்டில் மறைந்திருந்த சஜித் பிரேமதாச: அம்பலமாகும் தகவல்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) 2022ல் பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்த போது சஜித் பிரேமதாச(sajith premadasa) யால காட்டில் மறைந்திருந்ததாகவும், அனுரகுமார(Anurakumara Dissanayake) கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்ததாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (08) பிற்பகல் அம்பலாந்தோட்டை நகரில் நடைபெற்றது. ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம் - நாட்டை வெல்வோம் என்ற தொனிப்பொருளில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர(mahinda amaraweera)வின் ஏற்பாட்டில் இந்த பேரணி இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரியின் முயற்சி தவிடுபொடி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைப்பதற்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்படும்.
சவாலை ஏற்ற ரணில்
சவாலை ஏற்று இன்று நாட்டை சரியான இடத்திற்கு ரணில் விக்கிரமசிங்க(ranil wikremesinghe)கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா சுதந்திரகட்சியின் பதில் தலைவரும், துறைமுக, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா(nimal siripalade siva),
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளரே அதிபராக வருவார் எனத் தெரிவித்தார்.
(FHVZDU30
2030ஆம் ஆண்டு வரை ரணிலுக்கு ஆணை
2022 ஆம் ஆண்டு திவாலான நாட்டை திட்டமிட்டு முன்னோக்கி கொண்டு வந்தாலும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை அடித்தளம் போடப்பட்டுள்ளது என்றார்.
எனவே 2030ஆம் ஆண்டு வரை நாட்டை ஆட்சி செய்ய அதிபர் ரணிலுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |