பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளின் சம்பளம் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு பாதி சம்பளம் வழங்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய பல கொடுப்பனவுகளை வழங்காமல் இருக்கவும் நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ், இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளை பணி இடை நீக்கம் செய்ய நீதிச் சேவை ஆணைக்குழு சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.
நீதிச் சேவை ஆணைக்குழு
அதன்படி, அந்த நீதிபதிகளுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிச் சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு பாதி சம்பளம் வழங்குவதில் தொழில்முறை கொடுப்பனவுகள், தனிப்பட்ட கொடுப்பனவுகள், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் மற்றும் மொழி கொடுப்பனவுகள் மட்டுமே வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தொலைபேசி கொடுப்பனவுகள், வாகன கொடுப்பனவுகள், சாரதி கொடுப்பனவுகள், புத்தக கொடுப்பனவுகள், வீட்டு வாடகை கொடுப்பனவுகள், மேன்முறையீட்டு கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் என்பனவற்றை சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு வழங்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
