நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்: சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ளன.
குறித்த வேலை நிறுத்த போராட்டமானது இன்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் காலை முதல் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை (02) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் நான்கு மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் அலுவலகம்
இருப்பினும் இன்று அதிபர் அலுவலகம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமையினால் போராட்டத்தை ஐந்து வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக சானக தர்மவிக்ரம கூறியுள்ளார்.

அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் இன்று தீர்வு கிடைக்காவிட்டால் நாளை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |