வெற்றிக்கு தயாராகும் சிஎஸ்கே! வெளியானது சம்பள விபரம்
ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்தது. இதில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களின் விலை குறித்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டதுடன், இந்திய வீரர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பயிற்சியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்டீபன் பிளெமிங்
சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி ஊதியமாக பெற்று வருகிறார்.
சிஎஸ்கே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹசி ரூ.3 கோடியும், பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ ரூ.2.5 கோடியும் ஊதியாக பெற்று வருகிறார். அதேபோல் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி ஊதியாக பெற்று வருகிறார்.
பந்து வீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ரூ.2.2 கோடியும், துடுப்பாட்ட பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரே ரூ. 2 கோடியும் ஊதியமாக பெற்று வருகிறார்.
ஆஷிஷ் நெஹ்ரா
குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு ரூ.3.5 கோடிக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக செயல்பட்டு வரும் கேரி கிறிஸ்டனுக்கு ரூ.2.5 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. கேகேஆர் அணியின் பயிற்சியாளரான சந்திரகாண்ட் பண்டிட் ரூ.3.4 கோடி ஊதியமாக பெற்று வருகிறார்.
துடுப்பாட்ட பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபோஸ்டர் ரூ.2.4 கோடியும், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ரூ.2.4 கோடி ஊதியமாக பெற்று வருகிறார்.
பொல்லார்ட்
மும்பை அணியை பொறுத்தவரை தலைமை பயிற்சியாளர் பவுச்சருக்கு ரூ. 2.3 கோடி மட்டுமே ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது.
துடுப்பாட்ட பயிற்சியாளரான பொல்லார்ட் ரூ.3.8 கோடியும், பந்து வீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்கா ரூ.3.5 கோடியும் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
லக்னோ அணியை பொறுத்தவரை தலைமை பயிற்சியாளர் ஜஸ்டிங் லாங்கர் ரூ.2.5 கோடி ஊதியமாக பெற்று வருகிறார். அதேபோல் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்டி பிக்கல் ரூ.1.5 கோடி ஊதியமாக பெற்று வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |