அதிக விலையில் சீனி விற்பனை : நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள்

Sri Lanka
By Beulah Nov 16, 2023 01:17 AM GMT
Report

சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் இதற்கான அதிகாரம் அதிகார சபைக்கு இருப்பதாகவும் நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

அவ்வகையில், இந்த வருடத்தின் முடிவடைந்த முதல் 10 மாதங்களுக்குள் கட்டுப்பாட்டு விலையை மீறி சீனியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 350 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார மேலும் குறிப்பிட்டதாவது,

ராஜபக்சாக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா..!

ராஜபக்சாக்களின் குடியுரிமை பறிக்கப்படுமா..!

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள்

“சட்டவிரோதமாக சீனி தொகை பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதிக விலையில் சீனி விற்பனை : நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள் | Sale Of Sugar Beyond Control Price

பேலியகொடையில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையொன்றுக்கு செவ்வாய்க்கிழமை (14) சீல் வைக்கப்பட்டதுடன் அங்கிருந்து 270 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் சுற்றிவளைத்ததுடன் அங்கிருந்து 5 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களுக்குள் 22 ஆயிரம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது கட்டுப்பாட்டு விலையை மீறி சீனியை விற்பனை செய்த 350 இற்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

நுகர்வோர் சட்டத்தின் கீழ் இதற்கான அதிகாரம் உள்ளது. எவ்வாறாயினும் சீனியை கட்டுப்பாட்டு விலைக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் போது அதற்கான ரசித்தை பெற்றுக்கொண்டு 1977 எனும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்.”என்றார்.

தட்டுப்பாடு

அத்துடன், முன்னதாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான 25 சத வரியை இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்ததையடுத்து சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதிக விலையில் சீனி விற்பனை : நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட சுற்றிவளைப்புகள் | Sale Of Sugar Beyond Control Price

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலை அதிகரிப்பை தடுக்கும் நடவடிக்கையாக விசேட வர்த்தமானியின் மூலம் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதற்கமைய பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும் பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

சந்தையில் சீனிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் சட்டவிரோதமாகப் சீனியைப் பதுக்கி வைத்து கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ள நிலையில், நுகர்வோர் அதிகார சபையினால் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய படையை வெளியேற்றுவோம் : மாலைதீவு புதிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

இந்திய படையை வெளியேற்றுவோம் : மாலைதீவு புதிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026