அம்பாந்தோட்டையில் உப்பு அறுவடை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தில் சிறுபோக உப்பு அறுவடை உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வுவானது இன்று காலை (28.03.2026) இடம்பெற்றுள்ளது.
இந்தநிகழ்ச்சியில் உரையாற்றிய அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக,
உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது
தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்காலத்தில் நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும், உப்பின் விலை இன்னும் உயரவில்லை.
மேலும், பாலத்துபான, பண்டல மற்றும் மஹாலவய ஆகிய மூன்று உப்புச் சுரங்கங்களிலிருந்து சுமார் தொண்ணூறாயிரம் மெற்றிக்தொன் உப்பு பெற முடியும் என மதிப்பிட்டுள்ளதாக உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |