அம்பாந்தோட்டையில் மீண்டும் ஆரம்பமான உப்பு உற்பத்தி
லங்கா உப்பு நிறுவனம் 18 மாதங்களுக்குப் பிறகு அம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை 40,000 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதாக லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக தெரிவித்துள்ளார்.
வானிலை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு அம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை நிறுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உப்பு உற்பத்தி
அதனைத் தொடர்ந்து, இன்று (21) காலை உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 40,000 மெட்ரிக் தொன் உப்பு மட்டுமே பெறப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பாந்தோட்டை மகாலேவாவிலும் நாளை (22) உப்பு அறுவடை தொடங்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
