“அண்ணன் மற்றும் தம்பி” மோதல் பற்றி கவலைப்படவில்லை! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டின் சூழலை அழிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி நாட்டை ஆளும் ஜனாதிபதியாக மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே தெரிவித்துள்ளார்.
கோட்டபய ராஜபக்க்ஷ இந்த அறிக்கைகளை வெளியிட்டு ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார். ஆனால் பிரதமர் இடம் கொடுத்து வருகிறார் "அண்ணன் மற்றும் தம்பி” மோதல்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.
நாங்கள் பாதுகாக்க விரும்புவது இந்த நாட்டின் “சூழலை”என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்து்ளளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், வாக்களிக்கும் போது இளைஞர் சமூகத்திற்கு எந்த அரசியல் வேறுபாடுகளும் இருக்கவில்லை. புதிய எதிர் பார்புகளை இலக்காகக் கொண்டோ 90% இளைஞர்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்.
கோட்டாபய ராஜபக்க்ஷவைச் சுற்றி இளைஞர் சமூகம் கூடியது. அவர் படங்களை வரைந்தார் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பாலங்கொடையலருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வீதி சுவரில் இளைஞர் சமூகம் மற்றும் குழந்தைகள் தற்போதைய சூழல் அழிப்பு குறித்த சித்திரத்தை வரைந்துள்ளனர் இதயம் உள்ளடங்களாக.
நாட்டை விடுவிக்க வந்த அரசாங்கம் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்னபுரி மாவட்டத்தில் உள்ள சின்காராஜ தளத்தில் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் சென்று இந்த சேதங்களை எல்லாம் செய்கிறார்கள் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை, மஹிந்த ராஜபக்க்ஷ அவரின் அரசியலுக்கு ஆதரவாக இருக்கும் வணிகர்களின் வணிக சார்பு பிரிவைத் தான் போஷிக்கிறார். அவர் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ இந்த அறிக்கைகளை வெளியிட்டு ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார். ஆனால் பிரதமர் இடம் கொடுத்து வருகிறார் "அண்ணன் மற்றும் தம்பி” மோதல்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.
நாங்கள் பாதுகாக்க விரும்புவது இந்த நாட்டின் “சூழலை”என்று அவர் கூறினார். இப்போது நீர்ப்பாசன அமைச்சர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக டாங்கிகள் கட்டப்பட்டு வருவதாகவும், அங்கு நடக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க ரப்பர் நடப்படுவதாகவும் நகைச்சுவைகளைச் சொல்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் மட்டுமே மனித உரிமைகளுக்கு எதிரானவை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகிறார்.
உலகிலுள்ள ஒரே ஒரு பிராந்தியத்தில் மட்டும் ஏன் கோபம் வருகிறது? அரசாங்கம் அனைத்து நாடுகளையும் சமாளிக்க முடியாமல் தடமாறுகிறது. மனித உரிமைகள் மீறல் கிராம மட்டத்தில் சமுர்த்தி பெறுநர்-அதிகாரிகளிடையே இடம் பெறுகிறது.இன்று சமூர்த்தி அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.
சமூர்த்தி அரசியல்மயமாக்கப்பட்டதும் ஓர் மனித உரிமை மீறலே.
மனித உரிமைகள் அதிகாரத்திலுள்ளவரகளுக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற பித்து ஒழிக்கப்படும் வரை மனித உரிமைகளைப் பாதுகப்பது கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.