எங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் -ஐ.தே.கவிற்கு சஜித் அணி ஆலோசனை

srilanka samagi jana balawegaya
By Vasanth Apr 11, 2021 01:42 PM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட விரும்பும் உள்ளுராட்சி உறுப்பினர்களிடம் ஐக்கிய தேசிய கட்சி உறுதி மொழியை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதை கண்டிக்கின்றோம் என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்த உறுப்பினர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி அவர்களிடம் உறுதி மொழியை பெற்றுக் கொள்ள முன்னெடுக்கப்படும் முயற்சியானது குறித்த உறுப்பினர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயற்பாடாகும்.

இரு தசாப்தங்களுக்கும் அதிக காலம் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு கட்சியை பலவீனப்படுத்திய தலைமைத்துவம் தொடர்பில் சோர்வடைந்த ஆதரவாளர்கள் கட்சி முழுமையாக மாற்றமடைய வேண்டும் என்பதையே எதிர்பார்த்தனர்.

எனினும் அதற்கு வாய்ப்பளிக்காமல் ராஜபக்க்ஷக்களுடன் ரகசிய கூட்டணியமைத்து கட்சியையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றியமைக்கான பிரதி பலன் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கப் பெற்றது. முதலாவது நாடாளுமன்றத்திலிருந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி தற்போதைய நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி குறுகிய காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகியுள்ளது.

இந்த வெற்றியின் காரணமாக எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக உள்ளுராட்சி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்.

இதனை தடுப்பதற்காக உறுதி மொழி எடுக்க முற்படல் போன்ற மேலாதிக்கமான ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடும் ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

உறுப்பினர் பதவி நீக்கப்படும் அல்லது கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கு அடி பணியாத உள்ளுராட்சி உறுப்பினர்களிடம் உறுதி மொழி எடுத்து அவர்களை அச்சப்படுத்தும் செயற்பாட்டை நாம் கண்டிக்கின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுகின்ற சகல உறுப்பினர்களுக்காகவும் எமது கட்சி முன்னிலை வகித்து செயற்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்