அரசதலைவருக்கு கடுமையாக அறிவுரை வழங்க சமல் ராஜபக்ச தயார்?
விவசாயிகளின் பிரச்சினை மற்றும் உரப் பிரச்சினைகள் குறித்து அரசதலைவருக்கு கடுமையாக அறிவுரை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் வேலைகளை ஆரம்பிக்கவில்லை இது பாரிய பிரச்சினை என குறிப்பிட்டார். இந்நிலையில் குறைந்த பட்சம் நூற்றுக்கு 50 வீதமான பருவத்தில் விவசாயம் செய்யாவிட்டால் அடுத்த வருடம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் மூத்த சகோதரன் என்ற வகையில் நளின் பண்டாரவின் ஆலோசனையை உயர்வாக ஏற்றுக்கொள்கின்றேன் என அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) பதில் வழங்கியுள்ளார்.