இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்துள்ள உயரிய அங்கீகாரம்
Cricket
Sri Lanka Cricket
Chamari Athapaththu
By Laksi
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், சூப்பர் துடுப்பாட்ட வீராங்கனையுமான சாமரி அத்தபத்து, உலக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் திங்கட்கிழமை (22) புதுப்பிப்பின் படி, சாமரி அத்தபத்து 773 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்தார்.
முதலிடத்தில் சாமரி
அண்மையில் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை குவிப்பதற்கு முன்பு சமாரி துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
சாமரி இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 3,513 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதேவேளை,சாமரி அத்தபத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி