சம்பந்தன் மற்றும் திகாம்பரத்திற்கு மூன்றுமாதகால விடுமுறை
sampanthan
parliament
holiday
dikaamparam
By Jaso
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு மூன்று மாத கால விடுமுறையை வழங்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
நேற்றைய தினம் முதல் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சுகவீனம் காரணமாகவே இருவரும் விடுமுறை கோரியதாக தெரிய வருகின்றது.
பழனி திகாம்பரம், சிகிச்சைகளுக்காக இந்தியா சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்