ஜனவரி முதல் எட்டு இலட்சம் பேரின் சமுர்த்தி வெட்டு : அரசின் சதி செயல் அம்பலம்
அஸ்வசும வேலைத்திட்டத்தின் ஊடாக ஏறக்குறைய அரைவாசி மக்களின் சமுர்த்தி மானியம் குறைக்கப்பட்டுள்ளதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.
இதன்படி, இதுவரை சமுர்த்தி உதவித்தொகையை பெற்றுக்கொண்ட எட்டு இலட்சம் பேர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதனை இழப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் மானியத்தை வெட்டி யாருக்கு கொடுக்க
இது ஒரு கொடிய குற்றம். கஷ்டப்பட்டு வாழ முயலும் மக்களின் மானியத்தை வெட்டி யாருக்கு கொடுக்க முயல்கிறார்கள்.
எனவே இதை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அரசாங்கத்தில் உள்ளவர்களும் உதவி கேட்பார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.
இலாபத்தில் இயங்கிய சமுர்த்தி வங்கிகள்
கடந்த வருடம் சமுர்த்தி வங்கிகள் 12 பில்லியன் இலாபத்தை ஈட்டியதாகவும், அவ்வாறான சேவைகளை வழங்கும் சமுர்த்தியை அரசாங்கம் புறக்கணித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |