சற்றுமுன் உறவினர்களிடம் கையளிப்பட்டது சாந்தனின் பூதவுடல் (புதிய இணைப்பு)
புதிய இணைப்பு
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சாந்தனின் உடலை கையளிப்பதில் இழுபறி! தாமதிக்கும் வைத்தியசாலை
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குரலற்றோர் குரல் அமைப்பு ஒருங்கிணைப்பாளரும் சாந்தனின் மைத்துனனுமான கோமகனிடம் ஐபிசி தமிழ் தொடர்பு கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் காலை 11. 30 மணியளவில் இலங்கை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சாந்தனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி் : ஓரணியில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகள்!
உடலம் வைக்கப்பட்டுள்ள பெட்டி
இந்தநிலையில், சாந்தனின் உடலம் வைக்கப்பட்டுள்ள பெட்டி நீதிபதியின் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு அமைய அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு நீர்கொழும்பு நீதவான் இதுவரை (10.00 AM) சமூகமளிக்கவில்லை எனவும் அவர் வருகையின் பின்னரே பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்று மாலை சாந்தனின் உடலம் கையளிக்கப்படலாம் என கோமகன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சாந்தனின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அங்கு மக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.