சாந்தனின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்
Jaffna
Sri Lanka
By pavan
தமிழகத்தில் மறைந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் உடல் யாழ். வடமராட்சி, உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தி யாழ். வடமராட்சியை நேற்று மாலை சென்றடைந்த பின்னர் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகும்.
இறுதி யாத்திரை
இறுதிக்கிரியைகள் நிறைவு பெற்றதும் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து 12:30 மணிக்கு புகழுடல் சாந்தனின் பூர்வீக இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்துக்குப் எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்