வழங்கப்பட்ட நீதியை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிமால் விநாயகமூர்த்தி
சாந்தன் விடுவிக்கப்பட்ட போதும், அவருக்கு வழங்கப்பட்ட நீதி நிறைவேற்றத் தவறப்பட்டிருப்பது உலகத் தமிழர்களாகிய எம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையிருந்த ஏழு தமிழர்களில் ஒருவரான சாந்தனின் இழப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிருப்தியில் முடிந்த நீதி அகிம்சை தேசம் எனப் பெயர் பெற்ற இந்திய தேசத்தில் இத்தகையவொரு துயரும் இழப்பும் நிகழ்ந்தேறியிருப்பது துரதிஷ்டவசமானது.
துயரத்தில் ஆழ்த்திய மரணம்
இந்த விடயத்தில் இந்திய ஒன்றிய அரசிடம் உலகத் தமிழர்கள் நீதியை எதிர்பார்த்து நின்றனர். ஆனாலும் தாமதிக்கப்பட்ட நீதியும் அதிருப்தியில் முடிந்துள்ளது.
அத்துடன் இவருடன் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ராபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட மூவரின் விடுதலையை இந்தியா துரிதப்படுத்த வேண்டும் என்பதையும் சாந்தனின் இழப்பு அவசியப்படுத்தியுள்ளது.
நீதி விசாரணை தேவை சாந்தனின் இழப்பு தொடர்பில் தமிழ்நாட்டுத் தலைவர்களிடத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் நிலையில் அவை ஈழத் தமிழர்களை குழப்பகரமான சூழலுக்குள் தள்ள எத்தனித்துள்ளது.
எனவே இந்த விடயத்தில் இந்தியா சுயாதீனமான உயர்மட்ட நீதிவிசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
ஏனைய உறவுகளின் விடுதலை
இந்தியாவின் அணுகுமுறை மாற வேண்டும் இதேவேளை ஈழத் தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறை மாற்றமடைய வேண்டியமையும் இத்தகைய சூழல் அவசியப்படுத்துகின்றது.
அதுவே ஈழத் தமிழ் மக்களின் துயரை துடைப்பதுடன் இந்தியாவின் பூகோள நலன்சார் அம்சங்களுக்கும் அடிப்படையாக அமையும்.
அமரர் சாந்தன் , 32 ஆண்டுகள் சிறையிருந்து, விடுவிக்கப்பட்ட போதும் உயிர்நீத்தமை உலகத் தமிழர்களை உலுக்கியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அத்துடன் ஏனைய உறவுகளின் விடுதலை சாத்தியமடையவும் வலியுறுத்துகிறோம்…” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |