இறுக்கமான நிலை தொடர்ந்தால் பாரிய பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டி வரும்!
நாட்டில் இறுக்கமான சூழ்நிலையை கடைப்பிடித்தால் பாரிய பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊரடங்குச் சட்டம் போன்று ஒரு இறுக்கமான சூழ்நிலையை உருவாக்கினால் நாட்டில் ஏற்படும் பஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்பதே எனது நிலைப்பாடு.
உலக நாடுகளிலும் தற்போது இதே நிலைதான் காணப்படுகின்றது. பொருளாதாரம் மிக முக்கியமானது அதை பாதிக்கும் வகையில் செயற்பட முடியாது .
தற்போது கொரோனா தொறாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்ற காரணத்தினால் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்பு தான் மேலதிகமாக தடையை நீடிப்பதா அல்லது என்னசெய்வதென்று தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. இது உண்மையிலேயே அந்த ஊர் மக்களும் வயல் பிரதேசங்களில் இருக்கின்றவர்களுமே இந்த விடயங்களை செய்கின்றனர்.
இந்த விடயத்தை பொலிசாரால் மாத்திரம் கையாள முடியாது தடைப்படுத்தவும் முடியாது பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.