மகிந்த ராஜபக்சவை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய (India) உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் (Mahinda Rajapaksa) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (05) காலை கொழும்பு (Colombo) விஜேராம வீதியில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் ( Sagara Kariyawasam) இணைந்து கொண்டுள்ளார்.
தேசிய அமைப்பாளர்
அத்தோடு, சந்தோஷ் ஜா மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) இடையில் கடந்த 16 ஆம் திகதி சந்திபொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கை (Sri Lanka) இடையேயான பன்முகத்தன்மை கொண்ட பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |