புலிகளை பழிதீர்க்க அப்பாவி மக்களை வெறித்தனமாக வேட்டையாடிய பொன்சேகா
யாழ் (Jaffna) கரவெட்டிப் பிரதேசத்தில் வீதி உலா சென்றுகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அணி மீது விடுதலைப் போராளிகள் நடாத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் சிறிமால் மெண்டிஸ் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தை நடுங்க வைத்த நிலையில், யாழில் இராணுவ முகாமிட்டு இருந்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு வெளியில் நடமாடவே அச்சமான சூழலை உருவாக்கி இருந்தது.
இந்த சமயத்தில் வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்க ரெஜிமெனட் படைப்பிரிவுக்கு சரத் பொன்சேகா ( Sarath Fonseka) தலைமை தாங்கிகொண்டிருந்தார்.
இந்தநிலையில், விடுதலைப் போராளிகளின் தாக்குதலுக்கு பழிதீர்க்க முடிவெடுத்த அவர் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமானார்.
இதன் பிரகாரம் உடுப்பிட்டி, பொலிகண்டி மற்றும் வல்வெட்டித்துறை போன்ற பிரதேசங்களானது சிறிலங்கா இராணுவம் கொண்டு சுற்றிவளைக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டு அவ்வாறு கைது செய்யப்பட்ட சுமார் 75 தமிழர்கள் பல்வேறு இடங்களில் அன்றைய தினமே படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை நடவடிக்கை சரத் பொன்சேகாவின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற ஒரு கொடூர சம்பவமாக பதிவானது.
இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக அப்பட்டமான இனப்படுகொலை வேட்டைகளை மேற்கொண்ட சரத் பொன்சேகாவைதான் தற்போது சில தமிழ் அமைப்புக்கள் பாராட்டி வருவதை காணக்ககூடியதாக உள்ளது.
இந்தநிலையில் தற்போது இலங்கையின் மீட்பராக கருதப்படும் சரத் பொன்சேகா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகள், யுத்த காலத்தில் சரத் பொன்சேகாவின் முக்கிய நகர்வுகள், தமிழ் மக்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
