மனம் வருந்திய சரத் பொன்சேகா...!
ஐக்கிய மக்கள் சக்திக்குள் அண்மை நாட்களாக தொடரும் குழப்ப நிலை தொடர்பில் தான் வருந்துவதாக அந்த கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிட்ட காரணத்தால், சரத் பொன்சேகாவை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்ப நான் பல தியாகங்களை செய்தேன்.
தனிநபர் சொத்து
இந்த கட்சி ஒரு தனிநபரின் சொத்து அல்ல. புதிய பயணமொன்றுக்காக கட்டியெழுப்பப்பட்ட கட்சியை எந்த ஒரு காரணத்துக்காகவும் யாராலும் வீழ்த்த அனுமதிக்க முடியாது.
அவ்வாறு செய்வதன் மூலம் மக்களுக்கு நீதி கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.
கட்சியில் எனக்கு இருக்கும் பதவியை கொண்டு என்னால் முடியுமானவற்றை நான் மக்களுக்காக செய்வேன்.
எதிர்கால நடவடிக்கைகள்
அத்துடன், கட்சியை பாதுகாக்க என்னால் முடிந்தளவு பேராடுவேன். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
அரசியலில் நாம் செயல்படும் விதத்தில் ஜனநாயகம் இருக்க வேண்டும். அண்மை நாட்களில் என்னை கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி நீக்குவது தொடர்பில் பல செய்திகள் வெளியாகின.
இதனால் எனது அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.
எதிர்வரும் நாட்களில் எனது அரசியல் பயணத்துக்கு ஏற்படும் தடைகளை நான் வெற்றிகரமாக எதிர்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |